மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள்
13-Sep-2025
போடி: போடியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து செட்டியார்கள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கான கல்வி பரிசளிப்பு வழங்கும் விழா தலைவர் பிரபு தலைமையில் நடந்தது. செயலாளர் பரணி, பொருளாளர் சரவணகுமார், துணைத் தலைவர்கள் பாண்டியராஜ், ராஜேஷ் கண்ணன், விஜயகுமார், துணை செயலாளர்கள் பாலாஜி, ஜெயக்குமார், பிரபாகரன், காளிராஜ், ஆலோசகர் ரமேஷ், வழக்கறிஞர் பாலமுரளி முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் கலையரசி, எத்திலாக்கம்மாள் குத்து விளக்கு ஏற்றினர். ஊர்வலத்தை முன்னாள் எம்.எல்.ஏ., லட்சுமணன், பிரபாகரன் துவக்கி வைத்தனர். போடி பங்கஜம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன் துவங்கிய ஊர்வலம் நகரில் முக்கிய வீதிகளில் சென்றனர். விழாவில் 10, பிளஸ் டூ பொதுத் தேர்வு, நீட் தேர்வில் அதிக மதிப்பெண், தனித் திறன் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் சம்பத், போடி சி.பி.ஏ., கல்லூரி தலைவர் ராமநாதன், செயலாளர் புருஷோத்தமன், முன்னாள் செயலாளர் ஸ்ரீதர், போடி ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளி தலைவர் செந்தில் தியாகராஜன், முன்னாள் உதவி தலைமையாசிரியர் ராஜு, நகராட்சி முன்னாள் தலைவர் பழனிராஜ், துணைத்தலைவர் சங்கர், வர்த்தகர்கள் சங்கத் தலைவர் வேல்முருகன், துணைத்தலைவர் சண்முகம், ம.தி.மு.க., நகர செயலாளர் ஆரோ செல்வன், திருமலாபுரம் நாடார் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் பிருதிவிராஜ், அனைத்து செட்டியார்கள் உட்பிரிவுகளின் தலைவர், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
13-Sep-2025