உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  முதியவர் தற்கொலை

 முதியவர் தற்கொலை

கம்பம்: கம்பம் கம்பமெட்டு காலனியில் வசித்தவர் அசோகன் 65, இவரது மனைவி ராஜாத்தி 55, இவர்களுக்கு ரவீனா என்ற மகள் உள்ளார். அசோகனின் முதல் மனைவிக்கு 3 மகன்கள் உள்ளனர். அசோகன் கொத்தனார் வேலை பார்த்தார். சமீபத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டு ஆஞ்சியோ செய்துள்ளார். மது பழக்கத்திற்கு அடிமையானவர். மனைவி ராஜாத்தி. குடிக்க கூடாது என்று தடுத்தும், அவரால் குடியை விட முடியவில்லை. இதனால் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். வேலைக்கு சென்ற மனைவி திரும்பி வந்து பார்த்த போது கணவர் மயங்கி கிடந்ததை கண்டு தேனி மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். மகன் ஆனந்தன் புகாரின்பேரில் கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ