உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கார் மோதி முதியவர் பலி

கார் மோதி முதியவர் பலி

மூணாறு: மூணாறு அருகே தேவிகுளம் எஸ்டேட் பாக்டரி டிவிஷனைச் சேர்ந்தவர் ஜேக்கப்ஏசுதாஸ் 73. இவர், இரு தினங்களுக்கு முன்பு லாக்காடு எஸ்டேட் பகுதியில் கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற போது கார் மோதி பலத்த காயம் அடைந்தார். கோலஞ்சேரியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !