உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பஸ் மோதி முதியவர் பலி

பஸ் மோதி முதியவர் பலி

ஆண்டிபட்டி: மதுரை -தேனி மெயின் ரோட்டில் சக்கம்பட்டி அடுத்து சண்முகசுந்தரபுரம் அருகே நேற்றுமுன்தினம் தனியார் பஸ் மோதியதில் அடையாளம் தெரிந்த பெயர் முகவரி தெரியாத முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இறந்தவர் அப்பகுதியில் பழைய இரும்பு, காலி மது பாட்டில்களை சேகரித்து அங்குள்ள கடையில் வியாபாரம் செய்து வந்தார். இரு நாட்களுக்கு முன் பொருட்களை கடையில் போட்டுவிட்டு சைக்கிளில் சென்ற போது, பின்னால் சென்ற தனியார் பஸ் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இறந்தவர் பெயர், ஊர் குறித்த விபரங்கள் தெரியவில்லை. ஆண்டிப்பட்டி பிட் 1 வி.ஏ.ஓ., ஷியாம் சுந்தர் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ