புதிய நிர்வாகிகள் தேர்வு
தேனி: தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. உறவின்முறை மூத்த நிர்வாகிகள் வஜ்ரவேல், மோகனசுந்தரம், இளங்கோவன் தேர்தல் பொறுப்பாளர்களாக செயல்பட்டனர். சின்னமனுார் சார்பதிவாளர் கார்த்திகை ராஜ், மாவட்ட பதிவாளர் அலுவலக உதவியாளர் திலீப் பிரசாத் தேர்தல் பார்வையாளர்களாக பங்கேற்றனர். தேர்தலில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவராக தர்மராஜன், துணைத் தலைவராக ஜீவகன், பொதுச் செயலாளராக ஆனந்தவேல், பொருளாளராக ராமச்சந்திரன், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களாக அசோகன், பாலசுப்பிரமணியன், கோபி, கார்த்திகேயன், பாண்டிகுமார், ராஜா, ராமகிருஷ்ணன், சம்பத், செந்தில்குமார், சவுந்தரபாண்டியன், விஜய், விஜயகுமார் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.