உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இரு துணை மின் நிலைய ஊர்களில் மின் வாரிய எச்சரிக்கை அவசியம்

இரு துணை மின் நிலைய ஊர்களில் மின் வாரிய எச்சரிக்கை அவசியம்

கம்பம்: சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் இரண்டு துணை மின் நிலையங்கள் இருப்பதால், மின் தடை நாளில் எச்சரிக்கை நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாவட்டத்தில் வண்ணாத்திபாறை, கம்பம், உத்தமபாளையம், சின்ன ஒவுவாபுரம், மார்க்கையன்கோட்டை, தேவாரம், ராசிங்காபுரம், தேனி, பெரியகுளம், மதுராபுரி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பல ஊர்களில் துணை மின் நிலை நிலையங்கள் உள்ளன. இத் துணை மின் நிலையங்களில் மாதம் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை அறிவித்து பராமரிப்பு பணி நடைபெறும். இந்த ஊர்களில் ஒரு துணை மின் நிலையம் மட்டுமே உள்ளன. ஆனால் தப்புக்குண்டு மற்றும் காமாட்சிபுரத்தில் மட்டும் இரு துணை மின் நிலையங்கள் உள்ளன. இவற்றளில் ஒன்று மின்வாரியம், மற்றொன்று காற்றாலை மின்சார துணை மின் நிலையம் உள்ளது. காமாட்சிபுரத்தை சுற்றி இரண்டு தனியார் துணை மின் நிலையங்களும் உள்ளன.காமாட்சிபுரத்தில் கடந்த மாதம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்ற போது,மின்கம்பத்தில் பராமரிப்ப பணி செய்து கொண்டிருந்த கேங் மேன் பார்த்திபன் 27, மின்சாரம் பாய்ந்து பலியானார். அப்போது பராமரிப்பு பணிக்கு மின்சாரம் தடை செய்து பணி நடைபெற்ற போது, காற்றாலை துணை மின் நிலையத்தில் மின்சப்ளை இருந்துள்ளது.அதிகாரிகளின் கவனக் குறைவால் ஒருவர் உயிரிழந்துள்ளார். எனவே இனிமேலாவது காமாட்சிபுரத்தில் பராமரிப்பு பணிகளுக்கென மின் சப்ளையை நிறுத்தும் போது அதிகாரிகள் எச்சரிக்டையுடன் செயல்பட சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ