உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைகள்

 வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைகள்

கூடலுார்: கூடலுார் அருகே குள்ளப்ப கவுண்டன்பட்டியில் காட்டு யானைகள் நுழைந்து வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தியது. சுருளியாறு வனப்பகுதியை ஒட்டி குள்ளப்ப கவுண்டன்பட்டியில் தென்னை, வாழை விவசாயம் நடக்கிறது. தற்போது சபரிமலை மண்டல காலம் காரணமாக ஏராளமான காட்டு யானைகள் வெண்ணியாறு, சுருளியாறு, மேகமலை வனப் பகுதிகளில் இடம் பெயர்ந்து வருகிறது. சமீபத்தில் மழை பெய்த போதிலும் தற்போது வனப்பகுதியில் யானைகளுக்கு தண்ணீர் வசதி குறைவாக உள்ளது. இதனால் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் ஒட்டியுள்ள தனியார் விளை நிலங்களுக்குள் புகுந்து விளைப் பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு குள்ளப்ப கவுண்டன்பட்டியில் உள்ள ஒத்தக்களம் பகுதியில் நுழைந்த காட்டுயானைகள் தென்னை வாழை மரங்களை சேதப்படுத்தின. இதனால் விளை நிலங்களில் தங்கியுள்ள விவசாயிகள் அச்சமடைந்து உள்ளனர். சுருளியாறு வனப்பகுதி எல்லையில் அகழி பெயரளவிலேயே உள்ளது. இதனை வனத்துறையினர் ஆழப்படுத்தி யானைகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலி யுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை