மேலும் செய்திகள்
மயங்கி விழுந்து சுற்றுலாப் பயணி பலி
28-Apr-2025
தேனி : பத்ரகாளிபுரம் கிழக்கு தெரு ஜெகதீசன் 32. இவர் பெங்களூரூவில் சிவில் இன்ஜினியராக பணிபுரிகிறார். ஊரில் நடந்த கோயில் திருவிழாவிற்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு நடந்த கலை நிகழ்ச்சிகளை பார்க்கச் சென்றார். குடிபோதையில் இருந்தவர், திடீரென மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்த பள்ளியில் படுக்கவைத்தனர். தொடர்ந்து அவரது தாயார் ஜக்கம்மாள், மயங்கிய ஜெகதீசனை ஆட்டோவில் டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார். ஜெகதீசன் ஏற்கனவே இறந்து விட்டதாக பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர். இறந்தவர் உடல் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பழனி செட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Apr-2025