உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பொறியியல் கல்லுாரி  ஆண்டு விழா

பொறியியல் கல்லுாரி  ஆண்டு விழா

தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி ஆண்டு விழா மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர்.கல்லுாரிச் செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். செயலாளர் மகேஸ்வரன் வரவேற்றார். முதல்வர் மதளைசுந்தரம் ஆண்டு அறிக்கை சமர்பித்தார். மதுரை அண்ணா பல்கலையின் டீன் லிங்கதுரை, ஆண்டு மலரை வெளியிட்டு பேசுகையில்,' கல்வி ஒன்று மட்டுமே வாழ்க்கை, பொருளாதார முன்னேற்றம், தனிமனித ஒழுக்கம், ஆளுமைத் திறனை அளிக்கும். மாணவர்கள் படிக்கும் போதே தங்கள் அறிவை மேம்படுத்துவதன் மூலம் வாழ்க்கையில் வெற்றி அடைய முடியும்', என்றார். நிகழ்வில் 2024 - 2025 கல்வியாண்டில் சிறந்த மாணவ மாணவிகளாக கட்டடவியல்துறை மாணவி ஸ்வேதா, கணினி அறிவியல் துறை மாணவன் முகிலன், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவி விஷ்னு பிரியா, எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் துறை மாணவி ரிந்தியா, இயந்திரவியல் துறை மாணவன் ஸ்ரீராம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுகள் வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை