மேலும் செய்திகள்
மரக்கன்றுகள் நட்டு மாணவர்கள் பராமரிப்பு
26-Mar-2025
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே கரட்டுப்பட்டியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.தேனி மாவட்ட நிர்வாகம், மாவட்ட நீதித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங், மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சுவாமிநாதன் ஆகியோர் க.விலக்கு - வைகை அணை ரோட்டின் ஓரங்களில் வேம்பு, வாகை, புங்கை உட்பட பல்வேறு வகை மரக்கன்றுகளை நட்டனர். நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டு பராமரிப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மரங்கள் வளர்ப்பின் அவசியம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் திருக்குமரன், டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் பரமேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நெடுஞ்சாலை துறையினர் செய்திருந்தனர்.
26-Mar-2025