உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆசிரியர்களுக்கு சுற்றுச்சூழல் பயிற்சி

ஆசிரியர்களுக்கு சுற்றுச்சூழல் பயிற்சி

தேனி: தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் மாவட்டத்தை சேர்ந்த 80 ஆசிரியர்கள் உண்டு உறைவிட பயிற்சிக்கு தேர்வாகினர். அவர்களுக்கு மதுரையில் காலநிலை கல்வி முன் பயிற்சி வகுப்பு நடந்தது. வகுப்பிற்கு இடைநிலை மாவட்ட கல்வி அலுவலர் சுருளிவேல் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு காலநிலை மாற்றம், அதனால் உலகில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்டவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது. கருத்தாளர்கள் அனிஷா, வித்யா, கார்முகில் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கண்ணன், பசுமைத்தோழர் சந்திரலேகா பயிற்சி வகுப்பை ஒருங்கிணைத்தனர். பள்ளி நிர்வாகங்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பான செயல்பாடுகளை www.climeteeducation.tn.gov.in என்ற இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !