| ADDED : மார் 17, 2024 06:25 AM
பெரியகுளம்: ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம் என்பதை வலியுத்தி கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலமாகசென்றனர்.மாவட்ட காவல்துறை மற்றும் சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு இணைந்து 'ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம்' விழிப்புணர்வு முகாம் பெரியகுளம் மண்டபத்தில் நடந்தது. முன்னதாக ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் துவங்கிய ஊர்வலத்தை கலெக்டர் ஷஜீவனா, சரவணக்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தனர். விழிப்புணர்வு முகாமிற்கு எஸ்.பி., சிவபிரசாத் தலைமை வகித்தார்.மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா, கல்லூரி முதல்வர் சேசுராணி, செயலர் குயின்ஸிலி ஜெயந்தி, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., சக்திவேல், ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன், டி.எஸ். பி., ஞான ரவி தங்கதுரை, ஆதிதிராவிடர் தனி தாசில்தார் சுருளி, அரசு வழக்கறிஞர் இசக்கிவேல், பேரூராட்சி தலைவர்கள் நாகராஜ், பால்பாண்டி, தென்கரை இன்ஸ்பெக்டர்கள் வெள்ளையப்பன், ஆனந்த வடிவேல் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை சிறப்பு எஸ்.ஐ.,க்கள் ரகு, சுப்பையன், வேல்முருகன்செய்திருந்தனர்.