பருவமழையை எதிர்கொள்ள ரூ.20 லட்சத்தில் உபகரணங்கள்
தேனி: பருவமழையை எதிர்கொள்ள ரூ.20 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் பேரிடர் மேலாண்மை துறை மூலம் அரசுத்துறைகளுக்கு வழங்கப்பட உள்ளது.தற்போது தென்மேற்கு பருவ மழையால் மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தொடர்ந்து வடகிழக்கு பருவமழையின் போதும் மாவட்டத்தில் மழை பொழிவு இருக்கும். மழைகாலத்தில் பேரிடர்களை எதிர்கொள்ளவும், பொதுமக்களுக்கு உதவிட பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தீயணைப்பு, வனத்துறை, போலீசாருக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த உபகரணங்கள் தொகுப்பில் படகு, நங்கூரம், மரம் அறுவை இயந்திரம், இரும்பிலான நகரும் வகை பேரிகார்டுகள், டார்ச் லைட், கயிறு, ஷூ உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.