மேலும் செய்திகள்
பாலிதீன் பயன்பாடு ரூ.55ஆயிரம் அபராதம்
19-Dec-2024
தேனி : தேனி பஸ் ஸ்டாண்டில் நகராட்சி, உணவுப்பாதுகாப்புத்துறையினர் நடத்திய ஆய்வில் காலாவதியான 65கிலோ உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்து புகையிலை விற்ற இரு கடைகளுக்கு சீல் வைத்தனர்.தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் கலெக்டர் ஷஜீவனா கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டார். நகராட்சி, உணவுப்பாதுகாப்புத்துறையினர் தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தனார். தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் கவிப்பிரியா தலைமையில் சுகாதார அலுவலர் ஜெயராமன், உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் ஜனகர் ஜோதிநாதன், சுரேஷ் கண்ணன் குழுவாக ஆய்வு மேற்கொண்டனர். இதில் தயாரிப்பு, காலாவதி தேதி, உரியமுறையில் சுகாதாரமின்றி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 65 கிலோ உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு விற்பபைன செய்த 7 கடைகளுக்கு தலா ரூ.ஆயிரம், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 10 கடைகளுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இரு கடைகளுக்கு சீல் வைத்து, தலா ரூ. 50ஆயிரம் அபராதம் விதித்தனர்.
19-Dec-2024