மேலும் செய்திகள்
தந்தை கொலை மகன் கைது
02-Apr-2025
போடி : போடி மின்வாரிய அலுவலக பின்புற தெருவில் வசித்தவர் கணேசன் 50. இவர் விவசாய அபிவிருத்திக்காக திருமலாபுரத்தில் வசிக்கும் சேகர் என்பவரிடம் மாந்தோப்பை ஈடாக வைத்து ரூ.30 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.ரூ.15 லட்சத்தை திருப்பி கொடுத்து உள்ளார். மீதம் உள்ள பணத்தை ஒரு வருடமாக தராமல் கணேசன் தோட்ட வேலையை செய்து வந்துள்ளார். கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு வேலை செய்யுமாறு கணேசனை, சேகர் சத்தம் போட்டு உள்ளார். அடிக்கடி அலைபேசியில் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் மனம் உடைந்த கணேசன் வீட்டில் விஷம் குடித்துள்ளார். போடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றதில் கணேசன் இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்துள்ளார். போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
02-Apr-2025