உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பைக் - சரக்கு வேன் மோதல் தந்தை, மகன் பரிதாப பலி

பைக் - சரக்கு வேன் மோதல் தந்தை, மகன் பரிதாப பலி

தேவதானப்பட்டி:தேனி மாவட்டம், ஜி.கல்லுப்பட்டி பாத்திமா நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 55. இவரது மகன் வீரமுத்து கருப்பையா, 30, விவசாய கூலித்தொழிலாளிகள். நேற்று முன்தினம் இரவு 11:50 மணிக்கு டூ - வீலரில் பெரியகுளம் சென்றுவிட்டு, ஜி. கல்லுப்பட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். டூ - வீலரை மகன் ஓட்டினார்.டி.வாடிப்பட்டி பிரிவு அருகே வந்தபோது, டூ - வீலர் மீது ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகளை இறக்கி, கம்பம் ஓடைப்பட்டிக்கு சென்று கொண்டிருந்த சரக்கு வேன் மோதியது. இதில் தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தப்பி ஓடிய டிரைவரை தேவதானப்பட்டி போலீசார் தேடுகின்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !