உள்ளூர் செய்திகள்

பெண் தற்கொலை

போடி: போடி புதுக்காலனி எட்டாவது தெருவில் வசித்தவர் சண்முகப்பிரியா 35. இவரது கணவர் செல்லப்பாண்டி 40. கூலித் தொழிலாளி. இவர் அடிக்கடி மது குடித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று செல்லப்பாண்டி வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் ஆட்கள் இல்லாத போது சண்முகப்பிரியா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். செல்லப்பாண்டியின் தம்பி பால்பாண்டி புகாரில் போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை