மேலும் செய்திகள்
லாரி உரிமையாளரை தாக்கிய 6 நபர் மீது வழக்கு
20-Jul-2025
உத்தமபாளையம்: கேரளா, இடுக்கி மாவட்டம் அய்யப்பன் கோயில் பகுதியை சேர்ந்தவர் நிகிலேஷ் 57, இவருடைய மனைவி விஜயம்மா 50, இருவரும் உத்தமபாளையம் இந்திரா- நகரில் வாடகை வீட்டில் வசித்தனர். நிகிலேஷ் இடுக்கி மாவட்டம் சேந்தலை என்ற ஊரில் உரக்கடை நடத்தி வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் விஜயம்மா, தனது மகள் ஆப்பரேசனுக்காக கேரள சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு தனது கணவரை அலைபேசியில் தொடர்பு கொண்ட போது, அவர் பதிலளிக்கவில்லை. சந்தேகப்பட்டு மறுநாள் காலை வீட்டின் உரிமையாளரை அலைபேசியில் அழைத்து, மாடியில் உள்ள தனது வீட்டில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். வீட்டின் உரிமையாளர் சென்று பார்த்த போது நிகிலேஷ், கட்டிலில் குப்புற படுத்து கிடந்துள்ளார். தகவலின்பேரில் போலீசார் வந்து பார்த்த போது நிகிலேஷ் இறந்தது தெரிய வந்தது. உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
20-Jul-2025