மேலும் செய்திகள்
சின்னமனுார் வட்டாரத்தில் புகையிலை விற்பனை 'ஜோர்'
06-Mar-2025
சின்னமனூர் : கடமலைக்குண்டு மயிலாடும்பாறை அருகில் உள்ள நரியூத்து கிராமத்தை - சேர்ந்தவர் சுரேஷ் குமார் 45.இவர் பழனிச் செட்டிபட்டியில் தங்கி சின்னமனூர் பகுதி கிராமங்களிலும் பைனான்ஸ் தொழில் செய்துள்ளார். நேற்று முன்தினம் மாலை சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டியில் தோட்ட பகுதியில் விஷம் குடித்துள்ளார். நேற்று காலை இவர் சட்டைப் பையில் இருந்த அலைபேசி மணி ஒலித்துள்ளது. அப்பகுதியில் ஆடு - மேய்த்துக் கொண்டிருந்தவர் அலைபேசியை எடுத்து பேசி உள்ளார். அவர் மயங்கி கிடப்பதாக தகவல் கூறியுள்ளார். அவரது உறவினர்கள் போலீசாருடன் சென்று பார்த்த போது, அவர் இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றி சின்னமனூர் எஸ்.ஐ. சுல்த்தான் பாட்சா விசாரிக்கின்றார்.
06-Mar-2025