உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஜெயமங்கலம் தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து

ஜெயமங்கலம் தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து

தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி அணைத்தனர். ஜெயமங்கலத்திலிருந்து வைகை அணை செல்லும் ரோட்டில் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான 'கபி' தென்னை நார் தொழிற்சாலை உள்ளது. இங்கு தென்னை மட்டையிலிருந்து நார் பிரித்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. நேற்று மதியம் தென்னை நார் சேகரிப்பு பகுதியிலிருந்து பரவிய தீ தொழிற்சாலையில் பல இடங்களில் இருந்த மட்டை, நார் பகுதியில் தீ பிடித்தது. பெரியகுளம் தீயணைப்பு அலுவலர் பழனி தலைமையில் வீரர்கள் தீயை மாலை 4:00 மணி வரை போராடி அணைத்தனர். சேதமதிப்புகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. பெரியகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை