மேலும் செய்திகள்
ஆனி மாதம் துவங்கியதால் வெல்லம் விலை அதிகரிப்பு
01-Jul-2025
போடி: போடி அருகே அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் தர்மராஜ் 46. இவர் போடி அருகே சின்னாறு புலம் பகுதியில் கருப்பையா என்பவரின் கரும்பு தோட்டத்தை குத்தகைக்கு வாங்கி விவசாயம் செய்கிறார். கரும்பு தோட்டத்தில் நேற்று உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணியில் தர்மராஜ் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். நேற்று மதியம் அப்பகுதியில் பலத்த காற்று வீசியதில் உருண்டை வெல்லம் தயாரிக்கும் இடத்தில் இருந்த தீ கரும்பு தோட்டத்தில் பரவியது. இதில் தோட்டத்தில் இருந்த ரூ. 4 லட்சம் மதிப்பிலான கரும்புகள், வெல்லம் காய்ச்சும் இயந்திரம், கொப்பரை, வீட்டில் இருந்த டி.வி., மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம் ஆனது. தயாரித்து வைக்கப்பட்டு இருந்த ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான 50 மூடை உருண்டை வெல்லம் உருகி வீணானது. சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து குரங்கணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
01-Jul-2025