மரக்கழிவுகளில் தீ: 24மரங்கள் சேதம்
தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தைச்சேர்ந்த பஸ் உரிமையாளர் பார்த்திபன். இவருக்கு தேவதானப்பட்டி பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் 15 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. எருமலைநாயக்கன்பட்டியைச் சேர்ந்த செல்லையா 42. தோட்ட காவலாளியாக உள்ளார். வீட்டிற்கு சென்று விட்டு தோட்டத்திற்கு திரும்பியுள்ளார். அருகேயுள்ள தோட்டத்தைச் சேர்ந்த தேவதானப்பட்டி கணேசன், அவரது தோட்டத்தில் மரக்கழிவுகளுக்கு தீ வைத்தார். தீ சுவாலைகள் பார்த்திபன் தோட்டத்தில் பரவியது. இதில் மூன்று ஆண்டுகளாக வளர்த்து வந்த 24 தென்னை மரங்களில் தீ பரவி சேதமானது. செல்லையா தீயை அணைத்தார். இவரது புகாரில், கணேசன் மீது தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.