உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கேரளாவிற்கு கஞ்சா கடத்திய ஐவர் குண்டாசில் கைது

கேரளாவிற்கு கஞ்சா கடத்திய ஐவர் குண்டாசில் கைது

தேனி: கூடலுார் தெற்கு எஸ்.ஐ., கணேசன் தலைமையிலான போலீசார் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 டூவீலர்களில் வந்த நால்வர் சிக்கினர். விசாரணையில் கடலுார் மாவட்டம் லென்சி 22, கூடலுார் கருணாநிதி காலனி பாண்டியராஜ் 46, ஆண்டிபட்டி மணிகண்டன் 31, பொன்மணி 20, என தெரிந்தது. அவர்களின் டூவீலர்ளில் 6 கிலோ 600 கிராம் கஞ்சா இருந்தது. போலீசார் அதனை கைப்பற்றினர். கஞ்சாவை அவர்கள் கேரளாவிற்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. போலீசார் நால்வரையும் கைது செய்தனர்.இந்த வழக்கில் தொடர்புடைய ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மானஸ்சபாநாயக்கும் கைது செய்யப்பட்டார். ஐவரும் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.ஐவரையும் எஸ்.பி., சிவபிரசாத் பரிந்துரையில் கலெக்டர் ஷஜீவனா குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். ஐவரும் தேனி தேக்கம்பட்டி மாவட்டச் சிறையில் இருந்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ