உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தொடர் பண்டிகையால் பூக்கள் விலை ‛கிடுகிடு உயர்வு மல்லிகை கிலோ ரூ.1200க்கு விற்பனை

தொடர் பண்டிகையால் பூக்கள் விலை ‛கிடுகிடு உயர்வு மல்லிகை கிலோ ரூ.1200க்கு விற்பனை

தேனி: விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகை எதிரொலியாக பூக்கள் விலை கிடுகிடு வென உயர்ந்தது. தேனி பூ மார்க்கெட்டில் கடந்த வாரம் கிலோ ரூ. 600 வரை விற்பனையான மல்லிகை நேற்று கிலோ ரூ.ஆயிரம் முதல் ரூ.1200 வரை விற்பனையானது. அதே போல் மற்ற பூக்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. பூக்களின் விலை கிலோவில் முல்லைப்பூ ரூ.600, ஜாதிமல்லி ரூ. 500, கனகாம்பரம் ரூ. ஆயிரம், செவ்வந்தி ரூ. 300, சம்பங்கி ரூ. 300, கோழிக்கொண்டை ரூ. 100, செண்டுமல்லி ரூ.100, ரோஸ் ரூ.200, பட்டன்ரோஸ் ரூ. 400, தாஜ்மஹால் ரோஸ் கட்டு ரூ. 500க்கு விற்பனையானது. பூ வியாபாரிகள் சங்க தலைவர் கண்ணன் கூறுகையில், 'பூக்கள் வரத்து இயல்பாக உள்ளது. ஆனால், ஓணம், விநாயகர் சதுர்த்தி, திருமண முகூர்த்தங்கள் தொடர்ச்சியாக விஷேச நிகழ்ச்சிகள் வருகிறது. இதனால் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது. அனைத்து பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்தவாரம் ரூ. 50 வரை விற்பனையான வாடாமல்லி, தற்போது கிலோ ரூ. 280 வரை விற்பனையாகிறது,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை