மேலும் செய்திகள்
பெரியகுளம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு
30-Jul-2025
பெரியகுளம்: பெரியகுளத்தில் யானை தந்தம் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த சிலரை வனத்துறையினர் கைது செய்து, ரகசிய இடத்தில் விசாரணை செய்து வருகின்றனர். பெரியகுளம் பகுதியில் யானை தந்தம் பதுக்கி வைத்து, விற்பனை செய்வதற்கு பேச்சு வார்த்தை நடப்பதாக தேவதானப்பட்டி, ரேஞ்சர் அன்பழகன், பெரியகுளம் ரேஞ்சர் ஆதிரைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பெரியகுளத்தில் சிலரை யானை தந்தங்களுடன் வனத்துறை போலீசார் கைது செய்து, அவர்களுடன் தொடர்பு உள்ளவர்கள் யார்? எங்கிருந்து வந்தது உள்ளிட்ட விபரங்களை ரகசிய விசாரணை செய்து வருகின்றனர். ரேஞ்சர் அன்பழகன் கூறுகையில், 'சென்னையில் இருந்து 'ஸ்பெஷல் டீம்' ரகசிய இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த விபரம் எனக்கு தெரியாது.' என, தெரிவித்தார்.
30-Jul-2025