மேலும் செய்திகள்
துர்நாற்றம் வீசும் குடிநீர் வினியோகம்
28-Jul-2025
பெரியகுளம் : பெரியகுளம் சட்டசபை தொகுதி பா.ஜ., பூத்கமிட்டி வலிமைப்படுத்தும் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ராஜபாண்டி, திருப்பூர் முன்னாள் மாவட்ட தலைவர் (மாநில பொறுப்பாளர்) செந்தில்வேலன் தலைமையில் தென் கரையில் மண்டபத்தில் நடந்தது. இதில் பெரியகுளம் வடகரை வரதப்பர் தெருவைச் சேர்ந்த பா.ஜ., நகர முன்னாள் நகர தலைவர் முருகன் 58, பங்கேற்றார். இவர் ஆலோசனை வழங்க தயாரான நிலையில் காலை 11:30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இவர் 20 ஆண்டுகளாக நகரின் பா.ஜ., வளர்ச்சிக்கும், பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். தென்கரை கவு மாரியம்மன் கோயிலில் பூஜாரியாக பணியாற்றினார். இவரது மருமகள் திவ்யா தற்போது நகர தலைவராக உள்ளார். இவரது உடலுக்கு பா.ஜ., நிர்வாகிகள்,தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.
28-Jul-2025