உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  வகுப்பறையில் சீலிங் விழுந்து நான்கு மாணவர்கள் காயம்

 வகுப்பறையில் சீலிங் விழுந்து நான்கு மாணவர்கள் காயம்

மூணாறு: மூணாறு அருகே பைசன்வாலியில் அரசு மேல்நிலை பள்ளியில் வகுப்பறையில் 'சீலிங்' பெயர்ந்து விழுந்தது. இதில் நான்கு மாணவர்கள் காயம் அடைந்தனர். அங்கு ஓராண்டுக்கு முன்பு ரூ.10 கோடி செலவில் நவீன வகுப்பறைகளுக்கு கட்டடம் கட்டப்பட்டது. அதில் மாவட்ட ஊராட்சி சார்பில் ரூ.10 லட்சம் செலவில் கடந்த பிப்ரவரியில் ' சீலிங்' அமைக்கப்பட்டது. அந்த சீலிங்கின் ஒரு பகுதி நான்காம் வகுப்பறைக்குள் நேற்று முன்தினம் பெயர்ந்து விழுந்தது. அதனை அறிந்த மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியே ஓடினர். அப்போது சுவரில் மோதியும், கீழே விழுந்தும் நான்கு மாணவர்கள் காயம் அடைந்தனர். மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியேறியதும் மேலும் சீலிங் பெயர்ந்து மேஜை, பெஞ்ச் ஆகியவற்றின் மீது விழுந்தது. கட்டுமானத்தில் ஏற்பட்ட குளறுபடியால் சீலிங் பெயர்ந்து விழுந்ததாக தெரியவந்தது. அச் சம்பவத்தை கண்டித்து பா.ஜ., கட்சியினர் பள்ளியில் போராட்டம் நடத்தினர். சீலிங் அமைத்ததில் பல்வேறு குளறுபடி ஏற்பட்டதாக பள்ளி நிர்வாகம் ஏற்கனவே மாவட்ட ஊராட்சியில் புகார் அளித்தது. அதனால் ஒப்பந்ததாரருக்கு நிதி வழங்கவில்லை. இந்நிலையில் தான் சீலிங் பெயர்ந்து விழுந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி