உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பங்குச்சந்தையில் லாபம் ஈட்டலாம் எனக்கூறி ரூ.6.12 லட்சம் மோசடி

பங்குச்சந்தையில் லாபம் ஈட்டலாம் எனக்கூறி ரூ.6.12 லட்சம் மோசடி

தேனி:தேனியில் முகநுால் மூலம் அறிமுகமாகி பங்குசந்தையில் அதிக லாபம் ஈட்டலாம் என பட்டதாரியிடம் ரூ.6.12 லட்சம் பெற்று ஏமாற்றியவர்கள் மீது, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.தேனியை சேர்ந்த 45 வயது பட்டதாரி. இவர் அரசு உதவி பெறும் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணிபுரிகிறார். 2025 மார்ச் 11ல் அலைபேசியில் முகநுால் பார்த்துக் கொண்டிருந்தார். அதில் பங்குச்சந்தை முதலீடு தொடர்பாக விளம்பரம் தெரிந்தது. அதனை கிளிக்'செய்த போது, அது வாட்ஸ்ஆப் லிங்கில் இணைந்தது.அடுத்த ஒரு சில விநாடிகளில் 74089 07053, 76449 40272 என்ற எண்களில் இருந்து பட்டதாரி அலைபேசி எண்ணிற்கு மெசேஜ்' வந்தது. அதில், தியா வர்மா என பெயர் இருந்தது. மேலும் நாங்கள் கூறும் பங்குகளை வாங்கி விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும். மேலும் ஐ.பி.ஓ., மூலம் மும்மடங்கு லாபம் சம்பாதிக்கலாம். இதற்கு நீங்கள் எங்களது இணையதள முகவரியில் உங்கள் விவரங்களை பதிவு செய்திட வேண்டும். பின் பணத்தை முதலீடு செய்யலாம் என தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய பட்டதாரி 2025 மார்ச் 11 முதல் 2025 ஏப்.9 வரை பல்வேறு தவணைகளில் ரூ.6.12 லட்சத்தை அவர்கள்அலைபேசயில் கூறிய வங்கிக்கணக்கிற்கு அனுப்பினார். அதன்பின் பணத்தை வழங்காமல், மீண்டும் பணத்தை கேட்பதிலேயே குறியாக இருந்தனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளநிலை பட்டதாரி தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், எஸ்.ஐ., தாமரைக்கண்ணன் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை