உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஏ.டி.எம்.,ல் கொட்டிய ரூ.47,500; போலீசில் ஒப்படைத்த நண்பர்கள்

ஏ.டி.எம்.,ல் கொட்டிய ரூ.47,500; போலீசில் ஒப்படைத்த நண்பர்கள்

பெரியகுளம்; தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்.,மில் கார்டு செலுத்துவதற்கு முன் இயந்திரத்திலிருந்து கொட்டிய ரூ.47,500 ஐ நண்பர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிறகு அப்பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.பெரியகுளம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் சுந்தர் 27. இவரது நண்பர் தங்கப்பாண்டி 28. இருவரும் பெரியகுளம்- வைகை அணை ரோடு ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க சென்றனர்.சுந்தர் கார்டை இயந்திரத்தில் செலுத்த முயன்றபோது அதில் இருந்து 95 ரூ.500 நோட்டுக்கள் மொத்தம் ரூ.47,500 கொட்டியது. அதை இருவரும் டி.எஸ்.பி., நல்லுவிடம் ஒப்படைத்தனர்.அப்பணம் பெரியகுளம் குருசடி தெருவைச் சேர்ந்த ஆசிரியர் ராஜ்குமார் 48, உறவினருக்கு பணம் செலுத்த மிஷினில் செலுத்திய போது வெளியே வந்தது கண்காணிப்பு கேமரா வழியாக உறுதி செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையிலும் இந்த தகவல் உறுதியானது. பின் பணம் ராஜ்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பணத்தை ஒப்படைத்த தங்கப்பாண்டி, அவரது நண்பரை டி.எஸ்.பி., மற்றும் போலீசார் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ