உள்ளூர் செய்திகள்

பவுர்ணமி பூஜை

பெரியகுளம் : பெரியகுளம் அருகே கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் சித்திரை மாதம் பவுர்ணமியை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் மற்றும் கிரிவலம் சென்றனர். தேனி ஆவின் முன்னாள் தலைவர் ஓ.ராஜா அன்னதானம் வழங்கினார். ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு ஆலோசகர் ஜெயபிரதீப், தலைவர் நாராயணன், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி செய்திருந்தனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !