உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பிரதிஷ்டை இடங்களுக்கு சென்ற விநாயகர் சிலைகள்

பிரதிஷ்டை இடங்களுக்கு சென்ற விநாயகர் சிலைகள்

தேனி; மாவட்டத்தில் பல இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் செய்யும் பணி நடந்தது. அங்கிருந்து பிரதிஷ்டை செய்ய உள்ள இடங்களுக்கு பக்தர்கள் விநாயகரை எடுத்து சென்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டத்தில் 863 இடங்களில் விநாயகர் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹிந்து முன்னணி, ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் தேனி நகர்பகுதியில் நான்கு இடங்களில் விநாயகர் சிலை செய்யும் பணிகள் நடந்தது. இன்று விழா கொண்டாட உள்ளதையொட்டி தயாரான விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. நகர்பகுதியில் பலசரக்குகடைகள், பழக்கடைகள், பூ மார்க்கெட்டுகளில் விழாவிற்கு தேவையான பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை