உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலரில் கஞ்சா கடத்தியவர் கைது

டூவீலரில் கஞ்சா கடத்தியவர் கைது

தேவதானப்பட்டி,: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி புஷ்பராணி நகர் பகுதியில் எஸ்.ஐ., ஜான்செல்லத்துரை தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். டூவீலரில் வந்த கெங்குவார்பட்டி அருகே கோட்டார்பட்டி வடக்குதெருவைச் சேர்ந்த வெங்கடேசனை 25, போலீசார் சோதனை செய்தனர். வெங்கடேசன் இடுப்பு பகுதியில் பாலிதீன் கவரில் சுற்றப்பட்டிருந்த 14 கிராம் கஞ்சா, டூவீலர் கைப்பற்றப்பட்டது. விசாரணையில் கெங்குவார்பட்டி புஷ்பராணி நகர் முத்துப்பாண்டி மனைவி இன்பவள்ளி 51. கஞ்சாவை, வெங்கடேசனிடம் விற்பனை செய்துவருமாறு கொடுத்துள்ளார் என்பது தெரிந்தது. தேவதானப்பட்டி போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து, வெங்கடேசனை கைது செய்தனர். இன்பவள்ளியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை