உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  போடியில் ரோட்டில் பறக்கும் குப்பை

 போடியில் ரோட்டில் பறக்கும் குப்பை

போடி: போடியில் சேகரமாகும் குப்பையை அள்ளிச் செல்லும் வாகனங்களில் ' வலை விரிப்பு ' இன்றி செல்வதால் குப்பை ரோட்டில் பறந்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. போடி நகராட்சியில் வீடு தோறும் சென்று குப்பை வாங்கப்படுகின்றன. தெருக்கள், ரோட்டின் ஓரங்களில் சேகரமாகும் குப்பைகளை டெம்போ, மினி லாரி மூலம் சிறைகாட்டில் உள்ள குப்பை சேகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. வாகனங்களில் கொண்டு செல்லும் குப்பை ரோட்டில் சிதறாமல் இருக்க ' வலை விரிப்பு' நகராட்சி மூலம் வாங்கப்பட்டு உள்ளன. ஆனால் வலை விரிப்பு இன்றி குப்பைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது காற்றில் குப்பை ரோட்டில் பறந்து விழுகிறது. இதனால் சிதறும் குப்பை பின் பக்கமாக டூவீலரில் செல்வோர் மீது விழுந்து சிரமப்படுத்துகிறது. குப்பை ரோட்டில் சிதறாமல் இருக்க வாகனங்களில் வலை விரிப்பு பயன்படுத்திட நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ