உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காயத்ரி பெண்கள் மெட்ரிக் மேல்நிலை பள்ளி தொடர்ந்து நுாறு சதவீதம் தேர்ச்சி

காயத்ரி பெண்கள் மெட்ரிக் மேல்நிலை பள்ளி தொடர்ந்து நுாறு சதவீதம் தேர்ச்சி

சின்னமனூர்: பிளஸ் 2 பொது தேர்வில் சின்னமனூர் காயத்ரி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து நூறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகின்றது.சின்னமனூர் காயத்ரி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில் நூறு சதவீத தேர்ச்சி என்ற சாதனையை படைத்து வருகின்றது. இந்தாண்டு பிளஸ் 2பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. தொடர்ந்து பல ஆண்டுகளாக நூறு சதவீத தேர்ச்சியை இப்பள்ளி பெற்று வருகிறது. இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் இப்ப பள்ளி மாணவி நேத்ரா 600 க்கு 581 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், ஜன சேவிகா 548 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், கிருத்திகா 546 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர். மாணவி சக்தி பிரபா கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடத்திலும், கிருத்திகா வணிகவியல் பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றனர். 34 மாணவிகள் தேர்வெழுதி, அனைவரும் தேர்ச்சி பெற்றனர். 11 மாணவிகள் 500 க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றனர். மாணவிகளை பள்ளியின் தாளாளர் விரியன் சாமி, நிர்வாக அலுவலர் மனோஜ்கண்ணன், ஜெகன் சஞ்சீவ், முதல்வர் சசிகலா ஆகியோர் பாராட்டி,பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ