துாண் விழுந்து சிறுமி பலி
ஆண்டிபட்டி; தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரம் கோபாலகிருஷ்ணன் - அன்னலட்சுமி தம்பதி மகள் அஜிதாஸ்ரீ 4. நேற்று முன் தினம் தாய் தந்தை இருவரும் வேலைக்கு சென்று இருந்த போது சிறுமி மட்டும் வீட்டில் இருந்தார். வீட்டின் முன்பு இரண்டு சிமென்ட் தூண்களுக்கு இடையே கயிறு கட்டப்பட்டு துணி காய வைத்திருந்தனர். கயிறு மற்றும் துணிகளை சிறுமி இழுத்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சிமென்ட் தூண் ஒன்று சிறுமி தலை மீது விழுந்தது. இதில் அஜிதா ஸ்ரீ க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மயங்கிய நிலையில் இருந்த குழந்தையை அப்பகுதியினர் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி சிறுமி இறந்தார். ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.