மேலும் செய்திகள்
சிறுமி கர்ப்பம்: நால்வர் மீது போக்சோ வழக்கு
21-Apr-2025
பெரியகுளம்: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கும், தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் 27. என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. தற்போது சிறுமி 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். தகவல் அறிந்த பெரியகுளம் ஒன்றிய விரிவாக்க அலுவலர் வாசுகி விசாரணை நடத்தினார். அவரதுபுகாரில் சிறுமியை திருமணம் செய்த அஜித்குமார், அவரது தந்தை காமாட்சி, தாய் ஆதிலட்சுமி,சிறுமியின் தந்தை பாண்டி, தாய் சுமதி ஆகியோர் மீது போக்சோ சட்டப்பிரிவில் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
21-Apr-2025