உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாதயாத்திரை முருக பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்க வேண்டும்

பாதயாத்திரை முருக பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்க வேண்டும்

பெரியகுளம்: தேனி திண்டுக்கல் மாவட்டம் இணையும் எல்கை பகுதியான காட்ரோடு செக்போஸ்டில் முருகபக்தர்களுக்கு போலீசார் ஒளிரும் குச்சிகள் வழங்க வேண்டும்.தேனி மாவட்டத்தில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான முருக பக்தர்கள் பழநி பாதாயாத்திரை செல்கின்றனர். பெரியகுளம் சப்-டிவிசன் சார்பில், பக்தர்களுக்கு மாவட்டத்தின் எல்கை பகுதியான காட்ரோடு செக்போஸ்ட் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஜன., முதல் வாரத்திற்குள் ஒளிரும் குச்சிகள் வழங்குவது வழக்கம். இதனால் இரவு நேரங்களில் செல்லும் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். இந்தாண்டு இதுவரை வழங்கவில்லை. கடந்தாண்டைப் போல் ஒளிரும் குச்சிகள் வாங்கி தருவதற்கு சமூக ஆர்வலர்கள் தயாராக உள்ளனர். டி.எஸ்.பி., நல்லு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை