உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தங்க நகை திருடியவர் கைது

தங்க நகை திருடியவர் கைது

கூடலுார்: கேரளா வண்டிப்பெரியாறு சூரக்குளத்தைச் சேர்ந்தவர் பழனியம்மா 62. நேற்று முன்தினம் பகலில் வீட்டை பூட்டிவிட்டு தனது மகன் டீக்கடைக்கு சென்றார். மாலை மீண்டும் வீட்டில் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் தங்க நகை திருடு போனது தெரியவந்தது. வண்டிப் பெரியாறு போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணை நடத்தியதில் தங்க நகையை அரனக்கல் காலனியைச் சேர்ந்த முருகன் 45, திருடிச் சென்றது தெரிய வந்தது. போலீசார் இவரை கைது செய்து தங்க நகையை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !