உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர் மீது அரசு பஸ் மோதி ஒருவர் பலி

டூவீலர் மீது அரசு பஸ் மோதி ஒருவர் பலி

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் பரோட்டா மாஸ்டர் சிவனேசன் 43. அதே ஓட்டலில் பணிபுரிபவர் முருகபாண்டி 49. இருவரும் நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு கெங்குவார்பட்டியிலிருந்து, வத்தலக்குண்டுக்கு டூவீலரில் சென்றனர்.டூவீலரை சிவனேசன் ஓட்டினார். காட்ரோடு பிரிவு அருகே தேனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பஸ் டூவீலர் மீது மோதியது. இதில் இருவரும் காயமடைந்தனர். இருவரும் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போகும் வழியில் சிவனேசன் இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துப்பட்டியைச் சேர்ந்த டிரைவர் அருளப்பதுரையிடம் 47. விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை