உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு ஊழியர் சங்க ஆலோசனை கூட்டம்

அரசு ஊழியர் சங்க ஆலோசனை கூட்டம்

தேனி : தேனி மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்க மேற்கு கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கிளைத் தலைவர் பவுன்ராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். 'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அவுட்சோர்சிங் முறையில் பணியிடங்களை நிரப்புவதை தவிர்க்க வேண்டும். காலை உணவுத் திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ