மேலும் செய்திகள்
அரவிந்தர் கல்லுாரி பட்டமளிப்பு விழா
09-Aug-2025
உத்தமபாளையம்: பட்டம் பெறுவது என்பது இறுதி இலக்கு அல்ல. அது ஒரு புதிய தொடக்கம் என உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மதுரை காமராஜ் பல்கலை, டீன் கண்ணதாசன் பேசினார். இக் கல்லூரி பட்டமளிப்பு விழா கல்லூரி தாளாளர் தர்வேஷ் முகைதீன் தலைமையில் நடந்தது. ஆட்சி மன்ற குழு தலைவர் முகமது மீரான் முன்னிலை வகித்தார். முதல்வர் எச். முகமது மீரான் வரவேற்றார். மதுரை காமராஜ் பல்கலை டீன் கண்ணதாசன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது : பட்டம் பெறுவது இறுதி இலக்கு அல்ல. அது ஒரு புதிய தொடக்கம். கல்வி அறிவு மட்டும் போதாது. திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும். கட்டுப்பாடு மிகவும் அவசியம். இவை இருந்தால் கற்ற கல்வி பயன் தரும். கல்வியுடன் கூடிய ஒழுக்கம், பணிவு, சமூக பொறுப்பு மிக அவசியம். பட்டம் பெற்று வெளியே செல்லும் போது புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியது வரும். அஞ்சாமல் எதிர்கொள்ளுங்கள். தொழில்நுட்ப வளர்ச்சியையும், உலகளாவிய வாய்ப்புக்களையும் பயன்படுத்திக் கொள்ள தவறாதீர்கள். மாணவர்கள் புதுமையை சிந்திக்க கற்றுக் கொள்ளுங்கள். கல்வி உங்களுக்கு அறிவு தரும். ஆனால் அந்த அறிவை செயல்படுத்தும் திறமையே வாழ்வில் முன்னேற்றத்தை தரும் என்றார். விழாவில் 714 மாணவ மாணவிகளுக்கு இளங்கலை பட்டமும், 152 மாணவர்கள் முதுகலை பட்டங்களையும் பெற்றனர். இந்த விழாவில் நிர்வாக குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவலக கண்காணிப்பாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
09-Aug-2025