உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பேத்தி மாயம்: பாட்டி புகார்

பேத்தி மாயம்: பாட்டி புகார்

சின்னமனூர்: சென்னை கோடம்பாக்கம் அழகிரிபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் மகாலட்சுமி 18, சென்னையில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால், தேனி மாவட்டம் புலிகுத்தியில் உள்ள தனது தாயார் லட்சுமி வீட்டில் விட்டு சென்றுள்ளார். 2 ஆண்டுகளாக புலிகுத்தியில் இருந்த மகாலட்சுமி 2 நாட்களுக்கு முன் கோயிலிற்கு சென்று வருவதாக பாட்டியிடம் கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பாட்டி லட்சமி புகாரில் சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ