உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லறை திருநாள் அனுசரிப்பு

கல்லறை திருநாள் அனுசரிப்பு

தேனி: இறந்தவர்களை நினைவு கூறும் வகையிலும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கிறிஸ்துவர்களால் நேற்று கல்லறைத் திருநாள் அனுசரிக்கப்பட்டது. தேனி - பூதிப்புரம் ரோட்டில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் முன்னோர்களின் கல்லறைகளில் வழிபாடு நடத்தினர். காலையில் கல்லறைகளை சுத்தம் செய்தனர். மாலையில் கல்லறைகளை அலங்கரித்து மெழுகுவர்த்தி, பத்தி ஏந்தி வழிபாடு நடத்தினர். அங்கிருந்த அரங்கில் மதுரை ரோடு உலக மீட்பர் சர்ச் பாதிரியார் முத்து தலைமையில் நடந்த திருப்பலியில் பங்கேற்ற னர். தொடர்ந்து முன்னோர்களுக்கு படைத்த பின், கொண்டு வந்திருந்த உணவுப் பொருட்களை அங்கிருந்தவர்களுக்கு சாப்பிட வழங்கினர். இந்நிகழ்வில் தேனி, அரண்மனைப்புதுார், அல்லிநகரம், ஊஞ்சாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !