மேலும் செய்திகள்
திருச்சி, தஞ்சையில் ஹவாலா ரூ.1.49 கோடி பறிமுதல்
14-Jul-2025
ஆண்டிபட்டி:தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அம்மச்சியாபுரத்தை சேர்ந்த விவசாயி அறிவானந்தம் 65,உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். அம்மச்சியாபுரம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் அறிவானந்தம். இவர் வாய்க்கால்பட்டியில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. குன்னுார் வி.ஏ.ஓ., சசிகுமார், க. விலக்கு எஸ்.ஐ., முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் அறிவானந்தம் தோட்டத்து வீட்டின் மாடிக்கு சென்று சோதனை செய்தனர். அங்கு மரக்கட்டையுடன் கூடிய ஒற்றைக் குழாய் துப்பாக்கி இருந்தது. இந்த துப்பாக்கி வாங்கியதற்கான ரசீது, அதற்கான அரசு அனுமதி அவரிடம் இல்லை. இதனைத் தொடர்ந்து போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். போலீசார் கூறியதாவது: கைப்பற்றப்பட்ட துப்பாக்கி எச்.பி.நேசனல் ஏர் ரைபிள் -01 வகையை சார்ந்தது. இதற்கு லைசென்ஸ் தேவை இல்லை. ஆனால் துப்பாக்கி எங்கிருந்து யாரிடம் வாங்கப்பட்டது என்பதற்கான பில் உள்ளிட்ட ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். இந்த ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணை நடந்து வருகிறது என்றனர்.
14-Jul-2025