உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஒன்பது மாதங்களில் 49  பேர் மீது குண்டாஸ்

ஒன்பது மாதங்களில் 49  பேர் மீது குண்டாஸ்

தேனி: கடந்த ஒன்பது மாதங்களில் குற்றச்சம்பவங்களில் கைதான 49 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிக வழக்குகளில் கைதாகி மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவோர், போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் உள்ளிட்டவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கைதானவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., பரிந்துரையில் கலெக்டர் உத்தரவிடுகிறார். குண்டர் சட்டத்தில் கைதானவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்படுகின்றனர். தேனி மாவட்டத்தில் கடந்தாண்டு 95 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்தாண்டு 9 மாதங்களில் 49 பேர் குண்டாசில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் ரேஷன் பொருட்கள் கடத்தி கைதானவர்கள், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் என 15 பேரும், கஞ்சா,போதை பொருட்கள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்ட 27 பேர், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் செயல்பட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ