வெப்ப அலை முன் எச்சரிக்கை கூட்டம்
தேனி: கலெக்டர் அலுவலகத்தில் வெப்பஅலை முன்னெச்சரிக்கை தொடர்பான கூட்டம் நடந்தது. கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன் தலைமை வகித்தார். டெல்லியை தலையிடமாக கொண்ட ஆராய்ச்சி நிறுவன திட்ட இயக்குநர் சரவண்பிரபு, நிர்வாகி சங்கீதவாணி முன்னிலை வகித்தனர். மாவட்டத்தில் வெப்ப அலை தாக்குதல் உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் சில கிராமங்களில் மக்கட்தொகை அடர்த்தி காரணமாகவும் வெப்ப தாக்குதல் ஏற்படலாம். வெயில் காலத்தில் ‛ஹீட் ஸ்ட்ரோக்' ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. மருத்துவக்கல்லுாரி நிர்வாககிகள், வேளாண், தோட்டக்கலை, வனத்துறை, போலீஸ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். பேரிடர் மேலாண்மை தாசில்தார் சுந்தர்லால் கூட்டத்தை ஒருங்கிணைத்தார்.