மேலும் செய்திகள்
' கொடை'யில் சூறைக்காற்றுடன் சாரல் மழை
20-Jul-2025
தேனி:மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் இரவு வரை சாரல் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. தேனியில் கடந்த சில நாட்களாவே அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் சாரல் மழை பரவலாக பெய்தது. இதனால் பலவேறு இடங்களில் கட்டுமானபணிகள் முடங்கின. ரோட்டில் பொதுமக்கள் நடமாட்டமும் வழக்கத்தை விட குறைவாக காணப்பட்டது. பெரியஅளவில் மழை பெய்யாவிட்டாலும், சாரல் மழையால் பலரும் வீடுகளில் முடங்கினர். பணிக்கு சென்றவர்கள் மழையில் நனைந்தவாறு சென்று திரும்பினர். பஸ் ஸ்டாண்ட், வாரசந்தையில் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
20-Jul-2025