உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சதுர்த்தி விழாவிற்கு தயாரான 201 விநாயகர் சிலைகள் ஹிந்து முன்னணி ஏற்பாடு

சதுர்த்தி விழாவிற்கு தயாரான 201 விநாயகர் சிலைகள் ஹிந்து முன்னணி ஏற்பாடு

சின்னமனுார்: சின்னமனுாரில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக நடத்த 201 விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. சின்னமனுாரில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா ஹிந்து முன்னணி சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டும் சிறப்பாக நடத்த ஏற்பாடுகளை ஹிந்து முன்னணி செய்து வருகிறது. இந்தாண்டு 201 விநாயகர் சிலைகள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக செய்து, வர்ணம் தீட்டி தயார் நிலையில் உள்ளது. வரும் விநாயகர் சதுர்த்தி நாளில் பிரமாண்ட ஊர்வலம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை ஹிந்து முன்னணி கோட்டப் பொறுப்பாளர் கணேசன், மாவட்ட தலைவர் சுந்தர், மாவட்டப் பொதுச் செயலாளர் பாலமுருகன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர். இதே போன்று ஹிந்து எழுச்சி முன்னணி சார்பிலும் நுாற்றுக்கணக்கான சிலைகள் தயார் செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை