உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரயில்வே ஸ்டேஷனில் அலைமோதிய கூட்டம்

ரயில்வே ஸ்டேஷனில் அலைமோதிய கூட்டம்

தேனி: தமிழகத்தில் ஏப்., கடைசி வாரத்தில் இருந்து நேற்று வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் பலரும் குழந்தைகளுடன் சொந்த ஊர்கள், உறவினர் வீடுகளுக்கு வந்திருந்தனர். விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பதால், நேற்று பணிபுரியும் ஊர்களுக்கு திரும்பினர். இதனால் பஸ் ஸ்டாண்டில் காலை முதல் கூட்டம் காணப்பட்டது. திருச்சி, கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. இரவு சென்னைக்கு கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மாலையில் போடியில் இருந்து மதுரை வரை செல்லும் பாசஞ்சர் ரயிலில் அதிக அளவிலான பயணிகள் பயணித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை