உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி; கணவன், மனைவி மீது வழக்கு

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி; கணவன், மனைவி மீது வழக்கு

தேனி; தேனி பொம்மையக்கவுண்டன்பட்டி பாலன்நகர் செல்லப்பாண்டி 62. இவர் தனது வீட்டை அதே பகுதியை சேர்ந்த செந்தில்பாண்டியின் மனைவி மணிமாலாவிற்கு 2024ல் கிரையம் எழுதி கொடுத்தார்.செந்தில்பாண்டி, அவரது மனைவி மணிமாலா இணைந்து செல்லப்பாண்டியின் மகளுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.25 லட்சம் பெற்றுக் கொண்டு, அதற்குப் பதிலாக தங்களது வீட்டை செல்லப்பாண்டிக்கு ஒத்திக்கு எழுதி கொடுத்துள்ளனர். பின் செல்லப்பாண்டிக்கு தெரியாமல் அந்த வீட்டை வேறு நபருக்கு விற்பனை செய்து விட்டனர். இந்நிலையில் செல்லப்பாண்டி தான் வழங்கிய ரூ.25 லட்சத்தை திருப்பித் தரும்படி கேட்டார். செல்லப்பாண்டி 2024 மார்ச் 13ல் தனது தாயார் வீட்டிற்கு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த செந்தில்பாண்டி, மனைவி மணிமாலா இருவரும் இணைந்து கத்தியை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்தனர். பாதிக்கப்பட்ட செல்லப்பாண்டி புகாரில் அல்லிநகரம் போலீசார் செந்தில்பாண்டி, மணிமாலா மீது கொலைமிரட்டல், மோசடி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி